தொடர்புடைய செய்திகள்
- அவர்களை மாஃபியாவாகவே கருதுகிறேன் – குருமூர்த்தி விளக்கம்!
- திமுக குடும்ப ஊழல், அதிமுக கூட்டு ஊழல்: அரசியல் அட்டாக்கில் குருமூர்த்தி!!
- திமுக அழியப்போகிற கட்சி: துக்ளக் விழாவில் குருமூர்த்தி பேச்சு!
- அரசியல்வாதிகளுக்குதான் முதல் தடுப்பூசி! – பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
- இப்பவும் வரமாட்டேன்.. எப்பவும் வரமாட்டேன்.. தொல்லை பண்ணாதீங்க! – ரஜினி வேண்டுகோள்!
குருமூர்த்திக்கு கிங் மேக்கர்னு நினப்பு... ஜெயகுமார் நக்கல்!!
அமைச்சர் ஜெயக்குமார் தனது சமீபத்திய பேட்டியில் குருமூர்த்தி கருத்திற்கு பதிலளித்தார்.
ஒவ்வொரு ஆண்டும் துக்ளக் திருவிழா சென்னையில் நடைபெறும் நிலையில் இந்த ஆண்டு துக்ளக் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்துக்கொண்டார். ஜே.பி.நட்டா முன்னிலையில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி அரசியல் ரீதியில் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தார்.
அமைச்சர் ஜெயக்குமார் தனது சமீபத்திய பேட்டியில் குருமூர்த்தி கருத்திற்கு பதிலளித்தார். அவர் கூறியதாவது, குருமூர்த்தி மனதில் சாணக்கியன், கிங் மேக்கர் என்று நினைத்து கொண்டிருக்கிறார்.
பிதாமகன், சானக்கியன் போல் பேசி வருகிறார். 2021ல் அதிமுகவை கொண்டு வர மக்கள் தயாராகிவிட்டதாகவும், இல்லாத விஷயத்தில் வேண்டுமென்றே மாயையை ஏற்படுத்துவது அறிவற்றதன்மை.
டி.டி.வி.தினகரனிடம் காசு வாங்கிக்கொண்டு குருமூர்த்தி பேசி வருவதாகவும், குருமூர்த்தி எப்போது நாரதர் வேலை பார்க்க ஆரம்பித்தார் என்றும் தெரிவித்துள்ளார்.
