திமுக குடும்ப ஊழல், அதிமுக கூட்டு ஊழல்: அரசியல் அட்டாக்கில் குருமூர்த்தி!!

Sugapriya Prakash| Last Modified வெள்ளி, 15 ஜனவரி 2021 (09:04 IST)
துக்ளக் விழாவில் ஜே.பி.நட்டா முன்னிலையில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி அரசியல் ரீதியில் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தார். 

 
ஒவ்வொரு ஆண்டும் துக்ளக் திருவிழா சென்னையில் நடைபெறும் நிலையில் இந்த ஆண்டு துக்ளக் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்துக்கொண்டார். ஜே.பி.நட்டா முன்னிலையில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி அரசியல் ரீதியில் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தார். 
 
அப்போது, தமிழக அரசியல் காமெடி அரசியலாக மாறிவிட்டது. திமுகவும், அதிமுகவும் ஊழல் கட்சிகளே. திமுக குடும்ப ஊழல், அதிமுக கூட்டு ஊழல் என்று கூறினார். மேலும், திமுகவை வீழ்த்த சசிகலாவாக இருந்தாலும் வேறு யாராக இருந்தாலும் கங்கை ஜலத்துக்கு காத்திருக்காமல் எல்லா ஜலத்தையும் ஏற்றுக்கொள்ளலாம் என்று தோன்றுகிறது எனவும் குறிப்பிட்டார். 


இதில் மேலும் படிக்கவும் :