1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tourists are allowed kodaikanel from October 1

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி: என்னென்ன கட்டுப்பாடுகள்?

கொடைக்கானல்
கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு மேலாக சுற்றுலா தலங்கள் அனைத்திலும் அனுமதி மறுக்கப்பட்டது. சமீபத்தில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து தாஜ்மஹால் உள்ளிட்ட பல சுற்றுலாத் தலங்கள் மீண்டும் திறக்கப்பட்டது 
 
இந்த நிலையில் வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என கொடைக்கானல் வனத்துறை தெரிவித்துள்ளது 
 
கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் கொரோனா வைரஸ் இல்லை என்ற சான்றிதழுடன் வரவேண்டும் என்றும் வெளியிடங்களுக்கு செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் சுற்றுலாப் பயணிகள் ஒருவருக்கு ஒருவர் தனிமனிதன் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
கொடைக்கானலில் உள்ள பசுமை பள்ளத்தாக்கு, பைன் மரக்காடுகள், குணா குகை, லேக் ஆகிய இடங்களை பார்க்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் வனத்துறை தெரிவித்துள்ளது கடந்த சில மாதங்களாக கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படாத நிலையில் தற்போது அனுமதி கிடைத்துள்ளது சுற்றுலாப் பயணிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இதனை அடுத்து அக்டோபர் 1ம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் இருந்து வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
213 நாடுகளை வாட்டி வதைக்கும் கொரோனா: இன்றைய உலக நிலவரம்