நாளை சட்டமன்றம் கூடும் நிலையில் இன்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கைது.. பரபரப்பு தகவல்...
நாளை சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், எதிர்க்கட்சி தலைவரான உதயநிதி ஸ்டாலின் இன்று திடீரென கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதலமைச்சர் விஜய் குறித்தும், முன்னணி நடிகை ஒருவர் குறித்தும் அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை உதயநிதியின் வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் அவரை கைது செய்ய முயன்றனர்.
அப்போது, தான் உடனே கைது செய்யப்படுவதை விரும்பவில்லை என்றும், தனது வழக்கறிஞர் வரும் வரை காத்திருக்குமாறும் உதயநிதி தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. இருப்பினும், காவல்துறையினர் அதை பொருட்படுத்தாமல் அவரை கைது செய்யும் முயற்சியில் தீவிரமாக இறங்கினர். இதை கண்டித்து திமுக வழக்கறிஞர்கள் காவல்துறையினரிடம் பேச்சுவார்த்தை நடத்தியும், கைது நடவடிக்கையை தடுத்து நிறுத்த முடியவில்லை.
இதனை தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின் வீட்டின் முன்பு குவிந்த திமுக தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் காவல்துறையின் நடவடிக்கையைக் கண்டித்து தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் பரபரப்பும் நெரிசலும் ஏற்பட்டது.
சட்டமன்ற கூட்டத்தொடருக்கு முந்தைய நாளே எதிர்க்கட்சி தலைவர் கைது செய்யப்பட்டுள்ள இந்த சம்பவம், ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையேயான மோதலை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
Edited by Siva
