பெற்றோரை பார்க்க சென்னையில் இருந்து கொடைக்கானலுக்கு சைக்கிளில் சென்ற வாலிபர்!
சென்னையில் இருந்து கொடைக்கானலுக்கு சைக்கிளில் சென்ற வாலிபர்!
இபாஸ் கிடைக்காததால் தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் சென்னையிலிருந்து கொடைக்கானலுக்கு சைக்கிளில் பயணம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வரும் வெங்கடேஷ் என்பவர் கடந்த நான்கு மாதங்களாக பெற்றோரை பார்க்காமல் இருந்து வந்ததை அடுத்து அவர் பெற்றோரை பார்ப்பதற்காக இபாஸ்க்கு விண்ணப்பித்துள்ளார். ஆனால் அவருக்கு இபாஸ் கிடைக்காததை அடுத்து சென்னையில் இருந்து சைக்கிளிலேயே கொடைக்கானல் செல்ல முடிவு செய்தார்
இதனை அடுத்து அவர் கடந்த புதன்கிழமை சென்னையில் இருந்து சைக்கிளில் கிளம்பி நான்கு நாட்கள் சைக்கிளில் பயணம் செய்து கொடைக்கானல் சென்றடைந்தார். அதன்பின் தனது பெற்றோரை சந்தித்து உள்ளார்
இந்த நிலையில் வெங்கடேஷ் சென்னையில் இருந்து கொடைக்கானல் சென்றதை கேள்விப்பட்ட இபாஸ் அதிகாரிகள் கொடைக்கானலில் இருந்து வெங்கடேஷ் அவரது பெற்றோர்களுடன் சென்னை செல்வதற்கு இபாஸ் கொடுத்துள்ளனர். இதனால் அவர் மகிழ்ச்சி அடைந்துள்ளார். அவர் விரைவில் தனது பெற்றோரை அழைத்து கொண்டு சென்னை திரும்ப உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
பெற்றோரை பார்ப்பதற்காக சென்னையில் இருந்து சைக்கிளில் நான்கு நாட்கள் பயணம் செய்த வாலிபருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது