1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 9 செப்டம்பர் 2020 (10:29 IST)

6 மாத வெறுமை தீர்ந்தது: திறக்கப்பட்ட ஊட்டி, கொடைக்கானல்!!

இன்று முதல் தமிழக சுற்றுலாத்தலமான ஊட்டி, கொடைக்கானல் மக்கள் வருகைக்காக திறக்கபப்ட்டுள்ளது. 
 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் செயல்பட்டு வந்த அனைத்து சுற்றுலா தலங்களும் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டன. இந்த மாதம் பல தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதால் இயல்பு நிலை திரும்பி வருகிறது. 
 
அதன்படி, சுமார் 6 மாதங்களுக்கு பின் சுற்றுலா தலம் திறக்கப்பட்டுள்ளது. வெளிமாவட்ட பயணிகள் இ-பாஸ் பெற்று வர வேண்டும். அதேசமய்ம் உள்மாவட்ட பயணிகள் அடையாள அட்டை கொண்டு வந்தால் மட்டும் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.