தொடர்புடைய செய்திகள்
- தேமுதிக கொஞ்சம் வெயிட் பண்ணனும்! – அமைச்சர் ஜெயக்குமார்
- கொரோனா விவகாரம்: தமிழகம் டெல்லியை பின்பற்றும் அரியானா
- தமிழகத்தில் எத்தனை பேருக்கு கொரோனா வைரஸ்? அமைச்சர் விஜயபாஸ்கர் பதில்
- ரஜினி மீதான பெரியார் சர்ச்சை குறித்த வழக்கு; உத்தரவு நாளை ஒத்திவைப்பு
- செல்போன் காலர்ட்யூன் நல்லா இருக்கு,, ஆனா..! – ராமதாஸ் ட்வீட்!
பெட்ரோல் – டீசல் விலை குறைவு: இன்றைய நிலவரம்!
சென்னையில் பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து 31 காசுகள் விலை குறைந்து விற்பனையாகி வருகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விற்பனைக்கு ஏற்ப நாள்தோறும் விலை நிர்ணயம் செய்யும் முறையை இந்திய எரிபொருள் எண்ணேய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன.
நேற்று சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ.73.33 க்கும், டீசல் லிட்டர் ரூ.66.75 ஆகவும் விற்பனையாகி வந்தது.
இந்நிலையில் இன்று நேற்றைய விலையில் இருந்து 31 காசுகள் குறைந்து பெட்ரோல் ரூ.73.02 க்கும், டீசல் 27 காசுகள் விலை குறைந்து ரூ.66.48 க்கும் விற்பனையாகி வருகிறது.
