செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 9 மார்ச் 2020 (16:29 IST)

செல்போன் காலர்ட்யூன் நல்லா இருக்கு,, ஆனா..! – ராமதாஸ் ட்வீட்!

செல்போன்களில் வரும் கொரோனா விழிப்புணர்வு காலர் ட்யூனை பாராட்டியுள்ள ராமதாஸ் அதிலுள்ள குறையை குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியுள்ள சூழலில் மக்கள் இந்த வைரஸ் குறித்த பல்வேறு போலி செய்திகளால் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில் செல்போன் நிறுவனங்கள் தங்கள் நெட்வொர்க்கில் காலர்ட்யூன் வசதியில் பாடலுக்கு பதிலாக கொரோனா விழிப்புணர்வை தெரிவிக்கும் வாசகங்கள் ஒலிக்கும்படி செய்திருக்கின்றனர்.

இதற்கு மக்களிடையே வரவேற்பு இருந்தாலும் பலருக்கு அது ஆங்கிலத்தில் வெளியாவதால் என்னவென்று புரியாத நிலை உள்ளது. இதை சுட்டிக்காட்டியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் ”கொரோனா வைரஸ் தவிர்ப்பு குறித்த செல்பேசி காலர் ட்யூன் வடிவிலான விழிப்புணர்வு செய்தி மிகவும் பயனுள்ளது. ஆனால், நாட்டின் கடைக்கோடி குடிமகன் கூட செல்பேசியை பயன்படுத்தும் நிலையில், ஆங்கிலத்தில் மட்டும் செய்தியை வழங்குவது முழுமையாக பயனளிக்காது. மாநில மொழிகளிலும் வழங்க வேண்டும்!” என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.