செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: திங்கள், 9 மார்ச் 2020 (16:29 IST)

ரஜினி மீதான பெரியார் சர்ச்சை குறித்த வழக்கு; உத்தரவு நாளை ஒத்திவைப்பு

பெரியார் குறித்து ரஜினிகாந்த் சர்ச்சையாக பேசியதை தொடர்ந்து திராவிடர் விடுதலை கழகத்தினர் ரஜினி மீது வழக்கு தொடுத்த நிலையில், எழும்பூர் நீதிமன்றம் உத்தரவை நாளை ஒத்திவைத்தது.

துக்ளக் 50 ஆவது ஆண்டு விழாவில் பெரியார் குறித்து ரஜினிகாந்த் சர்ச்சையாக பேசியதை தொடர்ந்து, ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்கவேண்டும் என திராவிடர் விடுதலை கழகத்தினர் கூறிவந்தனர். மேலும் ரஜினி மீது சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இவ்வழக்கில் நாளை உத்தரவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.