வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 9 மார்ச் 2020 (19:20 IST)

கொரோனா விவகாரம்: தமிழகம் டெல்லியை பின்பற்றும் அரியானா

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலாக தாக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் ஒருவருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் தாக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது இதனை அடுத்து வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளும் எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதனடிப்படையில் டெல்லியில் சமீபத்தில் பயோமெட்ரிக் முறையில் வருகைப்பதிவு செய்வதற்கு விலக்கு அளிக்கப்பட்டது. டெல்லியை அடுத்து தமிழகத்திலும் ஆசிரியர்கள் பயோமெட்ரிக் வருகைப்பதிவு வரும் மார்ச் 31ம் தேதி வரை தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். பயோமெட்ரிக் மூலம் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் டெல்லி மற்றும் தமிழ்நாடு மாநிலங்களை அடுத்து தற்போது அரியானாவிலும் பயோமெட்ரிக் முறை விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று மாநிலதங்களை அடுத்து இந்தியாவிலுள்ள பிற மாநிலங்களும் இதனை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே கொரோனா வைரஸ் பாதிப்பு பிரச்சனை முடியும்வரை பயோமெட்ரிக் முறை விலக்கு அளிக்க நாடு முழுவதும் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.