வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 14 ஜூலை 2022 (18:35 IST)

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: நீலகிரி மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

rain
நீலகிரி மாவட்ட மக்கள் இன்று இரவு வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது என்பதும் பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் இன்று கனமழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்ட மக்கள் இரவில் வெளியே வரவேண்டாம் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது
 
இன்று இரவு நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது