தொடர்புடைய செய்திகள்
- 11 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்: சென்னையில் பேருந்து போக்குவரத்து பாதிப்பு!
- முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?
- முதல்வரின் தனி விமான செலவு அரசு செலவல்ல: அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்!
- அடுத்த 5 நாட்களுக்கு மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
- மஞ்சள் ஜெர்ஸிக்காக என் மனம் ஏங்கியது! – வர்ணனையில் ரெய்னா உருக்கம்!
நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் சரியும் தங்கம் விலை!
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று திடீரென தங்கம் விலை உயர்ந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் சரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் இன்று கிராமுக்கு 18 ரூபாய் குறைந்து ரூபாய் 4826.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 144 குறைந்து ரூபாய் 38608.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5225.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 41800.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 40 காசுகள் குறைந்து ரூபாய் 73.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 73000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
அடுத்த கட்டுரையில்
