1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : திங்கள், 28 மார்ச் 2022 (09:58 IST)

மாயாவதிக்கு ஜனாதிபதி பதவியா? பரபரப்பு தகவல்

உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதிக்கு ஜனாதிபதி பதவியை கொடுக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் ஜூலை 24ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் இந்த பதவிக்கு அடுத்து வரும் நபர் யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது
 
இந்த நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த மாயாவதி இடம் ’ பாஜகஉங்களுக்கு ஜனாதிபதி பதவி வழங்க முன்வந்தால் ஏற்பார்களா என்று கேட்டார்
 
அதற்கு பதில் அளித்த மாயாவதி பாஜகவிடம் பதவி பெற்றால் எங்கள் கட்சி முடிவுக்கு வந்துவிடும் என்றும் அந்த பதவியை நான் ஏற்க மாட்டேன் என்றும் எங்கள் கட்சி மற்றும் இயக்கத்திற்கு கெடுதல் விளைவிக்கும் எந்த ஒரு வாய்ப்பை ஏற்க மாட்டேன் என்றும் அவர் தெரிவித்தார்