வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 27 மார்ச் 2022 (17:23 IST)

முதல்வரின் தனி விமான செலவு அரசு செலவல்ல: அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்!

தமிழக முதல்வர்  மு க ஸ்டாலின் சமீபத்தில் துபாய்க்கு தனி விமானத்தில் சென்ற நிலையில் தனி விமான செலவு அரசு செலவல்ல என்று தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கமளித்துள்ளார். 
 
முதலமைச்சர் தனது குடும்பம் சகிதமாக அரசு செலவில் சுற்றுலா சென்றுள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி, அண்ணாமலை உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளன 
 
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முதலமைச்சர் துபாய் பயணம் செல்லும் நேரத்தில் விமானம் இல்லை என்பதால் தனி விமானத்தில் அவர் பயணம் மேற்கொண்டார் என்றும் அதற்கான செலவு அரசு செலவல்ல என்றும் திமுகவின் சொந்த செலவில் அவர் தனி விமானத்தில் பயணம் செய்தார் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்
முதல்வரின் தனி விமான செலவு அரசு செலவல்ல: அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்!