1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

11 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்: சென்னையில் பேருந்து போக்குவரத்து பாதிப்பு!

மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கு, தனியார் மயம் உட்பட பல்வேறு விவகாரங்களை கண்டித்து வேலை நிறுத்தம் செய்து வருகின்றன.
 
சென்னையில் போக்குவரத்துத் துறையின் சிஐடியுசி, தொமுச உள்ளிட்ட 11 தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளது.
 
12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி 2 நாட்கள் வேலை நிறுத்தம் செய்யப்பட்டு வரும் நிலையில் சென்னை பணிமனைகளில் பேருந்துகளை இயக்க ஊழியர்கள் முன்வரவில்லை. இதனால் சுமார் 3,500 பேருந்துகள் இயங்கவில்லை என கூறப்படுகிறது.
 
இருப்பினும் பொதுமக்கள் ஷேர் ஆட்டோ, மெட்ரோ போன்றவைகளில் பயணம் செய்து வருகின்றனர்.