1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Todat tamilnadu raining districts

பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள்? – வானிலை அறிவிப்பு!

Tamilnadu
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் மேலும் மழை வாய்ப்பு உள்ள மாவட்டங்கள் குறித்து வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

காற்று மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இந்நிலையில் நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் வட கடலோர மாவட்டங்கள், தருமபுரி, காரைக்கால், சேலம் ஆகிய பகுதிகளில் பல இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டல் மேலடுக்கு சுழற்சியினால் மேலும் 17 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், சூறாவளி காற்று மணிக்கு 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அந்தமான் பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
ஆகஸ்டே வந்தாலும் தமிழகத்தில் இப்போதைக்கு பஸ், டிரைன் ஓடாது...