1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 28 ஜூலை 2020 (11:51 IST)

ஊரடங்கு மீது அடுத்த ஆக்‌ஷன் என்ன? முதல்வர் ஆலோசனை!

முதல்வர் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு ஊரடங்கு குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
 
நேற்று தமிழகத்தில் 6,993 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2,20,716 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் கொரோனாவால் பாதிப்பு அடைந்த 6,993 பேர்களில் 1,138 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 95,857 ஆக உயர்ந்துள்ளது.
 
எனவே, கொரோனா பரவலை தடுக்கும் விதமாக வருகிற 31 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. ஜூலை மாதம் முழுவதும் எல்லா ஞாயிற்றுகிழமைகள் மட்டும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. 
 
இதனால் சென்னையின் பாதிப்பு குறைந்துள்ள நிலையில் பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் ஊரடங்கை நீட்டிப்பதா, இல்லையா என்பது குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் நாளை மறுநாள் (30 ஆம் தேதி) முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.
 
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு ஊரடங்கு குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆனால் இதற்கு முன்னர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதில் தமிழகத்தில் மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை என குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.