திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : செவ்வாய், 28 ஜூலை 2020 (09:25 IST)

சிபிஐ அதிகாரிகளை தொடர்ந்து காவலர்களுக்கும் கொரோனா! – மதுரையில் பரபரப்பு!

சாத்தான்குளம் சம்பவத்தில் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள காவலர்களுக்கும் கொரோனா ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் காவல்நிலையத்தில் தாக்கப்பட்டதால் இறந்த விவகாரத்தில் 5 போலீஸார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சிபிஐ அதிகாரிகள் அவர்களை சில நாட்களுக்கு முன்பு காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் சமீபத்தில் சாத்தான்குளம் விசாரணைக்காக வந்த 4 சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதை தொடர்ந்து மதுரையை சேர்ந்த உள்ளூர் அதிகாரியும் பாதிக்கப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை ஆறாக உயர்ந்தது.

இந்நிலையில் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள காவலர்கள் முத்துராஜ் மற்றும் முருகனுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதனால் சாத்தான்குளம் வழக்கில் சம்பந்தப்பட்டு கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.