வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 30 மே 2021 (17:23 IST)

கொரோனா பரவல் எதிரொலி: டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் ஒத்திவைப்பு

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஜூன் 8 முதல் ஜூன் 11 வரை நடைபெறவிருந்த போக்குவரத்து வாகன ஆய்வாளர் நிலை 2, தமிழ்நாடு போக்குவரத்து சார்நிலைப் பணிக்கான நேர்முகத் தேர்வு ஆகியவை தள்ளி வைக்கப்படுகின்றன. இந்த பதவிகளுக்கான நேர்முகத் தேர்வின் மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும். 
 
அதேபோல் மே 29, 2019ல் வெளியிடப்பட்ட ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள், உதவி மின் ஆய்வாளர் 2, உதவி பொறியாளர் (மின்சாரம்) (பொதுப்பணித்துறை), தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குநர் பதவிகளுக்கான கலந்தாய்வு தேதியும் ஒத்திவைப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் ஜூன் 22 முதல் ஜூன் 30ஆம் தேதி வரை நடைபெறவிருந்த துறைத் தேர்வுகள் தள்ளி வைக்கப்படுவதாகவும், முடிவுகள் வெளியிடப்படாத 14 துறைத் தேர்வுகளின் முடிவுகள் வரும் ஜூலை 20ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்களின் நலன் கருதி துறை தேர்வுகளுக்கான கடைசி தேதி மே 2021 என்று இருந்த நிலையில் அது தற்போது ஜூலை 31ஆக மாற்றம் செய்யப்படுவதாகவும், இதற்கான தேர்வு வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது