1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 14 ஜனவரி 2026 (20:28 IST)

பொங்கல் முடித்துவிட்டு சென்னை திரும்ப சிறப்பு ரயில்!.. ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!...

பொங்கல் முடித்துவிட்டு சென்னை திரும்ப சிறப்பு ரயில்!.. ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!...
பொங்கல் பண்டிக்கையை முன்னிட்டு சென்னை போன்ற வெளியூர்களில் வேலை செய்யும் பலரும் தங்களது சொந்த ஊருக்கு திரும்புவார்கள். குறிப்பாக சேலம், கோயம்புத்தூர், திருச்சி, ஈரோடு, கரூர், மதுரை, நெல்லை உள்ளிட்ட பல ஊர்களுக்கும் சென்னையில் பணிபுரிவரும் பரிபவர்கள் செல்வார்கள்.

சென்னையில் இருந்து கிளம்பும்போது பேருந்து அல்லது ரயில் என எதையாவது பிடித்து சொந்த ஊருக்கு சென்று விட்டாலும் பொங்கல் முடிந்து மீண்டும் சென்னை திரும்பும் போது வாகன வசதி இல்லாமல் பலரும் கஷ்டப்படுவதுண்டு. அந்த வகையில் பொங்கல் பண்டிகையை முடித்துவிட்டு நெல்லையிலிருந்து சென்னைக்கு திரும்புவதற்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்திருக்கிறது. அதன்படி வருகிற 18-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் ஒரு மணிக்கு நெல்லையிலிருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் (வண்டி எண் 06178) இயக்கப்படவுள்ளது.  

அந்த ரயில் அடுத்த நாள் அதிகாலை 3 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நெல்லையிலிருந்து கிளம்பும் இந்த ரயில் அம்பா சமுத்திரம், தென்காசி, சங்கரன்கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக தாம்பரம் வரும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.