வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 30 மே 2021 (14:47 IST)

கொரோனா வார்டுக்கு ஏன் சென்றேன்: முதல்வர் முக ஸ்டாலின் விளக்கம்

கொரோனா வார்டுக்கு ஏன் சென்றேன்: முதல்வர் முக ஸ்டாலின் விளக்கம்
இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு முதல்வர் கொரோனா வார்டுக்கு சென்று நோயாளிகளிடம் நலம் விசாரித்த சம்பவம் சற்றுமுன் கோவையில் நடந்தது என்பதும் அந்த பெருமையை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தான் தட்டிக் கொண்டு சென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில்தான் கொரோனா வார்டுக்கு ஏன் சென்றேன் என்பதை அவர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். கொரோனா வார்டுக்கு செல்ல வேண்டாம் என்று அக்கறை மிகுந்த ஒரு சிலர் அறிவுரை கூறினாலும், தன் உயிரையும் பணயம் வைத்து போராடும் மருத்துவர்கள் உள்ளிட்ட முன் களப்பணியாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள், அவர்தம் குடும்பத்தினருக்கு நம்பிக்கை கொரோனா வார்டுக்கு சென்றேன் என்றும் கூறியுள்ளார் 
 
மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கோவை ஈஎஸ்.ஐ மருத்துவமனை வார்டில் சிகிச்சை பெற்ரு வருபவர்களிடம் கொரோனா கிட் அணிந்து நேரில் சென்று நலம் விசாரித்தேன் என்றும் மருந்தோடு சேர்த்து மற்றவர்களும் ஊட்டும் நம்பிக்கையும் ஆறுதலும் அவர்களது நோயை குணப்படுத்தும் என்றும் தமிழக அரசு நிச்சயம் நம்பிக்கையை ஊட்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.