கரூரில் நடந்த சதி!. சிபிஐ விசாரணையில் சொன்ன விஜய்!... டெல்லியில் நடந்தது என்ன?...
தவெக தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27ம் தேதி பிரச்சாரத்திற்காக கரூருக்கு சென்றிருந்தபோது போலீசார் அனுமதிக்கப்பட்டிருந்த இடத்தில் விஜயை பார்ப்பதற்காக பல ஆயிரம் மக்கள் கூடியிருந்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் வரை உயிரிழந்த சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
தற்போது இந்த விவரம் தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது. கரூர் சம்பவம் முடிந்து இரண்டு நாட்கள் கழித்து ஒரு வீடியோ வெளியிட்ட விஜய் இந்த சம்பவத்திற்கு பின்னால் யார் இருக்கிறார் என்பது மக்களுக்கு தெரியும் என்று பேசியிருந்தார்.
இந்நிலையில்தான் இரண்டு நாட்களுக்கு முன்பு விஜய் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அப்போது அவரிடம் கரூர் சம்பவம் தொடர்பாக பல கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் கேட்டார்கள். அது ஒவ்வொன்றுக்கும் விஜய் மிகவும் பொறுமையாக பதில் சொன்னதாக சொல்லப்படுகிறது.
குறிப்பாக இந்த சம்பவத்தில் சதி ஏதேனும் நடந்திருப்பதாக நீங்கள் சந்தேகப்படுகிறீர்களா? என்று கேட்டதற்கு சதி நடந்ததா இல்லையா என்பது எனக்கு தெரியாது.. நான் எதையும் கண்ணில் பார்க்கவில்லை.. ஆனால் அந்த சம்பத்தால் பாதிக்கப்பட்டு காயமடைந்த மக்களை சந்தித்தபோது என் பின்னால் இருந்து யாரோ அடித்தார்கள் என்று பலரும் சொன்னார்கள்.. எனவே அதை திட்டமிட்ட ஒரு தாக்குதலாகவே நான் பார்க்கிறேன்.. அதை அவர்கள்தான் சொன்னார்கள்.. கரூர்ல ஏதோ சதி நடந்திருக்கிறது.. அதை நீங்கள்தான் விசாரிக்க வேண்டும் என சொன்னராம் விஜய்.