வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 30 மே 2021 (13:52 IST)

பிபிஇ உடையணிந்து கொரோனா வார்டுக்குள் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்!

கோவையில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் ஆய்வுக்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா வார்டில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கினாலும், தினசரி பாதிப்புகளில் தலைநகர் சென்னையை விட கோவையில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கோவையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்ய சென்றுள்ளார். பிபிஇ கொரோனா கவச உடை அணிந்து கோவை இஎஸ்.ஐ மருத்துவமனையில் ஆய்வுகள் மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா வார்டிற்கு சென்று கொரோனா நோயாளிகளை நலம் விசாரித்து, குறைகளை கேட்டறிந்தார்.