இது சும்மா டீசர்தான்!.. மெயின் பிக்சர் இருக்கு!.. விஜய்க்கு செக் வைக்கும் டெல்லி வட்டாரம்!...
விஜய் கட்சி துவங்கியதில் இருந்தே திமுகவை மட்டுமே தொடர்ந்து திட்டி வருகிறார். ஒருபக்கம் பாஜக தனது கொள்கையை எதிரி எனவும் சொல்லி வருகிறார். இந்நிலையில்தான் கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்க்கு சம்மன் அனுப்பி டெல்லி வரவழைத்து விசாரணை நடத்தியது சிபிஐ. அதோடு அவரின் ஜனநாயகம் படத்திற்கு சென்சார் மூலம் பிரச்சனை வந்திருக்கிறது. இப்படி டெல்லி மூலம் விஜய் தொடர்ந்து சிக்கல்களை சந்திக்க தொடங்கி இருக்கிறார்.
இதற்கு பின்னணியில் சில காரணங்கள் சொல்லப்படுகிறது.. விஜய் தனித்து போட்டியிட்டால் அது திமுகவுக்கு பாதிப்பாக அமையும். நமக்கு எந்த நஷ்டமும் இல்லை என முதலில் டெல்லி பாஜக வட்டாரம் நினைத்ததாம். ஆனால் அவர்கள் சமீபத்தில் எடுத்த சர்வே படி விஜய் தனித்து போட்டியிட்டால் அது திமுகவுக்கு ஆதரவாகவே அமையும் என்பது தெரிய வந்திருக்கிறது. இதையடுத்துதான் ஜனநாயகன் படத்திற்கு தடை, சிபிஐ சம்மன் என வேகம் காட்டி வருகிறது டெல்லி வட்டாரம் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
இந்திய ஜனநாயகக் கூட்டணியில் இணையுங்கள்.. இல்லையென்றால் தேர்தலை புறக்கணியுங்கள் என டெல்லி பாஜக வட்டாரம் விஜய்க்கு அழுத்தம் கொடுப்பதாக சொல்லப்படுகிறது.. அதையும் மீறி அவர் தேர்தலில் போட்டியிட்டல் எல்லா தொகுதிகளிலும் ஒரு சின்னத்தில் மட்டுமே போட்டியிட வேண்டியிருக்கும். விஜய்க்கு இப்போது காட்டப்படுவது வெறும் டீசர் மட்டும்தான்.. முழு நீள படம் இனிமேல்தான் என்று சொல்லி சிரிக்கிறது டெல்லி பாஜக வட்டாரம்.