வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 30 மே 2021 (13:41 IST)

ஊரடங்கிலும் மதுபானத்தை கடத்தி விற்பனை! – 600 பாட்டில்களுடன் பிடிபட்ட வாகனம்!

தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் விழுப்புரம் அருகே வெளிமாநிலத்திலிருந்து மதுபானங்களை கடத்தி வந்த வாகனம் பிடிபட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ள நிலையில் டாஸ்மாக் மற்றும் தனியார் மதுபான கடைகளும் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் தமிழக எல்லை பகுதி மாவட்டங்களை சேர்ந்த பலர் மது வாங்க ஆந்திர எல்லைக்குள் நுழைவது உள்ளிட்டவையும் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சோதனைச்சாவடியில் போலீஸார் சோதனை பணியில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக ஆட்களை ஏற்றிக் கொண்டு டாடா ஏசிஇ வாகனம் ஒன்று சென்றுள்ளது.

அதில் சோதனை நடத்தியதில் அதன் மேற்கூரையில் 600 மதுபான பாட்டில்களை பதுக்கி கொண்டு வந்தது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக வாகனத்தையும், மது பாட்டில்களையும் பறிமுதல் செய்த போலீஸார் டிரைவரையும் கைது செய்துள்ளனர்.