திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 30 மே 2021 (15:03 IST)

எனது கோரிக்கையை ஏற்று செயல்படுத்திய முதல்வருக்கு நன்றி – ஓபிஎஸ் ட்வீட்!

கொரோனாவால் இறந்தவர்களின் குழந்தைகளுக்கு தேவையான உதவிகளை செய்ய முதல்வர் வெளியிட்ட அறிவிப்பிற்கு ஓ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலால் பலர் உயிரிழந்துள்ள நிலையில், பெற்றோர்களை இழந்து வாடும் குழந்தைகளை பாதுகாக்க அரசு நடவடிக்கைகள் எடுத்துள்ளது. இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்புநிதியில் செலுத்தப்படும் என்றும், அவர்களுக்கான கல்வி செலவை அரசே ஏற்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து ட்விட்டர் வாயிலாக நன்றி தெரிவித்துள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ” கொரோனா தொற்று காரணமாக பெற்றோர்களை இழந்து பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் குழந்தைகளுக்கு தேவையானவற்றை செய்து கொடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 28.5.2021 அன்று அறிக்கை வாயிலாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை கேட்டுக் கொண்டிருந்தேன். எனது வேண்டுகோளை ஏற்று அதற்கான அறிவிப்பினை 29.5.2021 அன்று வெளியிட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.