1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 14 ஜனவரி 2026 (16:01 IST)

நாய்கள் இல்லா கிராமம் என தேர்தல் வாக்குறுதி.. 500 நாய்களை கொன்ற 7 கிராம தலைவர்கள் மீது வழக்குப்பதிவு..!

நாய்கள் இல்லா கிராமம் என தேர்தல் வாக்குறுதி.. 500 நாய்களை கொன்ற  7 கிராம தலைவர்கள் மீது வழக்குப்பதிவு..!
தெலங்கானாவில் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக சுமார் 500 தெருநாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்ட கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஹனம்கொண்டா மற்றும் காமாரெட்டி மாவட்டங்களில் நடந்த இந்த  நாய் வேட்டையில், 7 கிராம தலைவர்கள் உட்பட 15 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமீபத்திய பஞ்சாயத்து தேர்தலின் போது, "நாய்கள் இல்லாத கிராமத்தை உருவாக்குவோம்" என வேட்பாளர்கள் அளித்த வாக்குறுதியே இந்தச்சட்டவிரோத செயலுக்கு காரணமாக கூறப்படுகிறது.
 
நாய்களுக்கு விஷ ஊசி செலுத்தி கொல்லும் அதிர்ச்சிகரமான வீடியோக்கள் ஆதாரங்களாக கிடைத்துள்ளன. ஹனம்கொண்டாவில் மட்டும் புதைக்கப்பட்ட 110 நாய்களின் உடல்களை போலீஸார் தோண்டி எடுத்துள்ளனர். குற்றவாளிகள் மீது பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் விலங்கு வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
 
நாய்களை கொல்வது சட்டவிரோதமானது என உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ள நிலையில், 2023-ஆம் ஆண்டின் விலங்குகள் பிறப்புக் கட்டுப்பாட்டு விதிகளை தீவிரமாக பின்பற்றுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
 
Edited by Siva