மணல் மோசடி!. துரைமுருகனுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க முடிவு....
2021 முதல் 2024 வரை நீர்வளத்துறை அமைச்சராக துரைமுருகன் இருந்தபோது தமிழ்நாட்டில் உள்ள 28 குவாரிகள் ஆற்றில் மணல் எடுக்கும் பணிகளில் ஊழலும், முறைகளும் நடைபெற்றதாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. வெளிப்படையான டெண்டர் முறைக்கு பதிலாக வரையறுக்கப்பட்ட டெண்டர் மூலம் ஒப்பந்தங்களை உருவாக்கி போலியான பற்று சீட்டுகளை தயாரித்து குவாரிகளில் ஆற்று மணலை கொள்ளையடித்து அதன் மூலம் அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும் சென்னை, புதுக்கோட்டை, திருச்சி, கரூர், வேலூர், மதுரை, கோயம்புத்தூர், சேலம், நாமக்கல் உள்ளிட்ட 34 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு குற்றத்தை நிரூபிக்கும் 825 ஆவணங்களும், 11 மின்னணு சாதனங்கள் மற்றும் மூன்று வங்கி லாக்கர் சாவிகளை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இதனைத்தொடர்ண்ந்த் முன்னாள் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட 14 அரசு ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், விரைவில் துரைமுருகனுக்கு சம்மன் அனுப்பி அவரை நேரில் வரவழைத்து அவரிடம் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு துறையினர் முடிவு செய்துள்ளனர்..