1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. lady lost five lakh thorugh online scam

ஆன்லைனில் ரூ.550 மதிப்புள்ள ஆடைக்கு ரூ.4.82 லட்சம் கட்டி ஏமாந்த பெண்... பொதுமக்கள் உஷார்!...

online purchase
தற்போதெல்லாம் ஆன்லைனில் ஆடைகளையும், பொருட்களையும் வாங்குவதற்கு flipkart, amazon, meesho போன்ற ஆப்கள் வந்துவிட்டன. அதேபோல்  Facebook, Instagram போன்ற சமூகவலைதளங்களில் நிறைய விளம்பரங்களும் வருகின்றன. அதில் மிகவும் குறைவான விலைக்கு ஆடைகளும், பொருட்களும் விற்கப்படுவதாக விளம்பரங்கள் வருகிறது.

அதை உண்மை என நம்பி அதில் கொடுக்கப்பட்டுள்ள லின்க்கை கிளிக் செய்து பலரும் பணம் செலுத்தி ஏமாறுகிறார்கள். இப்படித்தான் மேட்டூரை சேர்ந்த வசந்தா என்கிற பெண் இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரத்தை பார்த்து ரூ.550 மதிப்புள்ள ஆடைக்கு ரூ.4.82 லட்சம் செலுத்தி ஏமாந்திருக்கிறார்.

இன்ஸ்டாகிராமில் தனது குழந்தைக்காக ரூ.550 மதிப்பு கொண்ட ஒரு ஆடையை அவர் ஆர்டர் போட்டுள்ளார். மூன்று நாட்கள் ஆகியும் ஆடை வரவில்லை. எனவே இன்ஸ்டா விளம்பரத்தில் இருந்த செல்போனில் தொடர்பு கொண்டு வசந்தா பேசியிருக்கிறார். அப்போது டெலிவரி கட்டணமாக ரூ.1500 செலுத்த வேண்டும் என மர்ம நபர் கூறியிருக்கிறார். அதை நம்பி அந்த பணத்தை வசந்தா செலுத்தியிருக்கிறார்.

அதன் பின்னரும் ஆடை வராததால் அந்த நபரை வசந்தா தொடர்பு கொண்டு கேட்டபோது மீண்டும் 5 ஆயிரம் ரூபாய் செலுத்துங்கள்.. ரூ.6500-ஐ உங்களுக்கு திருப்பி கொடுத்துவிடுவோம் என்று கூறியிருக்கிறார். அதை நம்பி மீண்டும் வசந்தா பணம் செலுத்தியிருக்கிறார். இப்படி 22 முறை ரூ.4.82 லட்சத்தை வசந்தா அனுப்பியிருக்கிறார். அதன் பின்னரும் அந்த மர்ம நம்பர் பணம் கேட்க தான் ஏமாற்றப்பட்டது உணர்ந்த வசந்தா சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்திருக்கிறார்.

போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் ஆன்லைனில் வருகிற விளம்பரங்களை பார்த்து லின்க்கை கிளிக் செய்து யாரும் ஆர்டர் போட வேண்டாம்.. பணம் செலுத்த வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
தேர்தலில் தோல்வி! - பிரதமர் பதவியை இழக்கும் நெதன் யாகு!...