தவெக ஆட்சியை கவிழ்க்க சதி!.. செந்தில்பாலாஜிக்கு போலீஸ் சம்மன்!...
தவெக ஆட்சியை கழிப்பதற்காக தவெக எம்.எல்.ஏக்களிடம் சிலர் பேரம் பேசியதாக சமீபத்தில் புகார் இழந்தது. ஊத்தங்கரை தவெக எம்.எல்.ஏ இளையராஜாவிடம் சிலர் அணுகி சட்டசபையில் சபாநாயகருக்கு திமுக கொண்டுவரும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக நீங்கள் வாக்களித்தால் உங்களுக்கு ரூ.35 கோடி பணம் கொடுக்கிறோம் என பேரம் பேசியிருக்கிறார்கள்.
இதையடுத்து இளையராஜா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் இதுவரை திருநாவுக்கரசு என்பவர் உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கரூர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோருக்கு இதில் தொடர்பிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
எனவே, செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் ஆகியோரை கைது செய்யும் முயற்சியில் போலீசார் இறங்கினர். ஆனால் அவர்கள் இருவரும் தலைமறைவாகி விட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில்தான், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் இருவரும் வருகிற திங்கள் கிழமை சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என போலீசார் சம்மன் அனுப்பியிருக்கிறார்கள்.
கரூர் ராமேஸ்வரபட்டியில் உள்ள செந்தில் பாலாஜியின் வீட்டிற்கு சென்ற போலீசார் அங்கே செந்தில் பாலாஜியின் தந்தையிடம் சம்மனை வழங்கி அவர்களிடம் கையெழுத்துப் பெற்றுள்ளனர்.