பிக்பாஸ் தோல்வி!.. விஜய் சேதுபதி மார்கெட் போன நடிகர்!.. பிரபலம் பேட்டி!...
சமீபத்தில் பிக்சர்ஸ் நிகழ்ச்சியில் பேசிய அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் விஜய் சேதுபதி வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளை கொடுத்து விட்டு பொறுப்பும் பிரச்சனையும் வரும்போது கேள்வி எழுப்பினால் எதிரணி மீது பழி சுமத்திவிட்டு தெறிச்சி ஓடுவது ஒரு தலைமை பண்புக்கு அழகல்ல. அது ஏமாற்று வேலை என பேசியிருந்தார்.
பிக்பாஸ் வீட்டில் சட்டசபை போன்ற ஒரு செட்டப்பை உருவாக்கி அது தொடர்பான டாஸ்க் கொடுக்கப்பட்டது. அது தொடர்பாக பேசிய போதுதான் விஜய் சேதுபதி இப்படி கருத்து தெரிவித்திருந்தார். ஆனால் அவர் மறைமுகமாக விஜயைத்தான் தாக்குகிறார் என விஜய் ரசிகர்களும், தவெக ஆதரவாளர்களும் புரிந்து கொண்டார்கள். இதையடுத்து கடந்த இரண்டு நாட்களாக விஜய் சேதுபதியை அவர்கள் திட்டி வருகிறார்கள்.
ஆனால் முழுக்க முழுக்க பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக மட்டுமே விஜய் சேதுபதி பேசினார்.. வேறு யாருடனும் தொடர்புபடுத்தி பார்க்க கூடாது என விஜய் டிவி விளக்கமளித்தது. இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்த மூத்த பத்திரிக்கையாளர் மணி விஜய் சேதுபதி ஒரு மார்க்கெட் போன நடிகர்.. பிக்பாஸ் சீசன் 10 செல்ப் எடுக்கவில்லை. 10 சீசன்களில் இதுதான் மோசமான சீசன்.. திமுக இருந்தபோது வாயை மூடிக்கொண்டிருந்தார்.. எப்படியாவது தனது மார்க்கெட்டை காப்பாற்றிக்கொள்ள சர்ச்சையாக ஏதாவது பேச வேண்டும் என அப்படி பேசுகிறார் என கூறியிருக்கிறார்..