1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. cm vijay strict order to police to arrest senthil balaji

செந்தில் பாலாஜி உள்ள இருக்கணும்!.. விஜய் போட்ட ஆர்டர்!.. நடப்பது என்ன?...

senthil balaji
கரூர் சம்பவத்தில் தன்னை திமுக பலிகாடாக்கியது முதலமைச்சர் விஜய்க்கு கோபத்தை ஏற்படுத்தியது. பலமுறை இந்த கோபத்தை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு சட்டசபையில் பேசியபோது கூட ‘கரூர் சம்பவத்த்தில் என்னை ஏன் குற்றம் சொன்னார்கள்?’ ஆக்கினார்கள் என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில்தான், தவெக ஆட்சியை கவிழ்ப்பதற்காக தவெக எம்.எல்.ஏக்கள் சிலரிடம் பேரம் பேசியது தொடர்பான புகாரில் சமீபத்தில் சிலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். விசாரணையில் அவர்கள் செந்தில் பாலாஜி கும்பலை சேர்ந்தவர்கள் என்பதை தெரிய வந்திருக்கிறது..

இதையடுத்து செந்தில் பாலாஜி மற்றும் அவர்களின் சகோதரர் அசோக்குமார் ஆகியோரை கைது செய்யும் முயற்சியில் தமிழக காவல்துறை ஈடுபட்டிருக்கிறது. ஆனால் இது தெரிந்ததும் அவர்கள் இருவரும் தற்போது தலைமறைவாகிவிட்டனர்.முதல்வர் விஜய் விரைவில் கருருக்கு செல்லவிருக்கிறார்.

எனவே ‘நான் கரூருக்கு செல்லும்போது செந்தில் பாலாஜி சிறையில் இருக்க வேண்டும்’ என காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு விஜய் உத்தரவு போட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.. எனவே தனிப்படை அமைத்து செந்தில் பாலாஜியும், அவரின் சகோதரர் அசோக்குமாரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது..
அடுத்த கட்டுரையில்
வைர மோதிரத்தால் டிரம்புக்கு வந்த சிக்கல்!.. வட போச்சோ!...