1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. TN Police catch a gutka container

பெங்களூரில் இருந்து தமிழகத்திற்கு குட்கா கடத்தல்! – 4 பேர் கைது!

Tamilnadu
கிருஷ்ணகிரி வழியாக தமிழகத்திற்கு குட்கா கடத்த முயன்ற நபர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தமிழகத்தில் குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது என்றாலும் முறைகேடாக பல பகுதிகளில் விற்கப்பட்டும் வருகிறது. இந்நிலையில் கடந்த 6ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் காவல்துறை நடத்திய அதிரடி சோதனையில் பல ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டதுடன், குட்கா பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில் இன்று கிருஷ்ணகிரியில் காட்டுவீர ஆஞ்சநேயர் கோவில் அருகே போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த கண்டெய்னர் லாரி ஒன்றை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்டவை 6.5 டன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக 4 பேரை கைது செய்த காவல்துறை ரூ.60 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளது. இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
பெய்ஜிங் நோக்கி படையெடுக்கும் ரோபோக்கள்! – கவனம் ஈர்க்கும் ரோபோ கண்காட்சி!