செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : திங்கள், 27 டிசம்பர் 2021 (10:57 IST)

இந்த மூஞ்ச ஏற்கனவே பாத்திருக்கோமே..! நெட்டிசன்களிடம் சிக்கிய அருள்வாக்கு அன்னபூரணி!

செங்கல்பட்டில் அருள்வாக்கு அன்னபூரணி அம்மன் என்று கூறிக்கொண்ட பெண் குறித்து நெட்டிசன்கள் வெளியிட்டு வரும் தகவல்கள் வைரலாகி வருகின்றது.

செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆதிபராசக்தியின் அவதாரம் அன்னபூரணி அம்மன் என பெண் சாமியார் ஒருவரின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது. அந்த பெண் ஒரு மண்டபத்தில் சிலருக்கு ஆசி வழங்கும் வீடியோவும் இணையத்தில் வைரலானது.

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அந்த பெண்ணை எங்கேயோ பார்த்து போல இருப்பதாக தேடி பார்த்து அவர் யார் என்பதை கண்டறிந்துள்ளனர். தனியார் தொலைக்காட்சியில் குடும்ப பிரச்சினைகளை பட்டவர்த்தனம் செய்யும் நிகழ்ச்சி ஒன்று நடந்து வந்தது. நெட்டிசன்களால் பலமுறை கலாய்க்கப்பட்ட அந்த ஷோவில் தன் கணவனை விட்டு வேறு ஒருவருடன் தன்னை சேர்த்து வைக்க சொல்லி இந்த பெண் வந்துள்ளார். அந்த நிகழ்ச்சியின் வீடியோவை கண்டெடுத்த நெட்டிசன்கள் அந்த பெண்தான் இந்த பெண் சாமியார் என சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் திருமண மண்டபத்தில் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என்று மண்டப உரிமையாளரிடம் போலீஸார் எச்சரித்துள்ளதாகவும், பெண் சாமியாரை தேடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.