பெய்ஜிங் நோக்கி படையெடுக்கும் ரோபோக்கள்! – கவனம் ஈர்க்கும் ரோபோ கண்காட்சி!
சீனாவில் நடைபெற உள்ள ரோபோக்கள் கண்காட்சிக்காக உலகம் முழுவதிலும் இருந்து ரோபாக்கள் வந்துக் கொண்டிருக்கின்றன.
அறிவியல் வளர்ச்சியின் பெரும் முயற்சியாக ரோபோக்கள் எப்போதும் பார்க்கப்படுகின்றன. மனிதர்களுக்கு ரோபோக்கள் மீதான ஆவல் காலம் காலமாக இருந்து கொண்டே இருக்கிறது. அதேசமயம் ரோபோக்கள் எதிர்காலத்தில் ஆபத்தானவையாக மாறக்கூடும் என்ற கருத்துகளும் உள்ளன.
என்றாலும் ரோபோ தொழில்நுட்பத்தில் உலக நாடுகள் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன. சுயமாக சிந்திக்கும் AI ரோபோக்களை உருவாக்க விஞ்ஞானிகளும் முயற்சித்து வருகின்றனர்.இந்நிலையில் பெய்ஜிங்கில் நடைபெற உள்ள ரோபோக்கள் கண்காட்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மனித வாழ்வில் பல்வேறு பணிகளுக்கும் பயன்படும் வகையில் உலக நாடுகளில் செய்யப்பட்டுள்ள 300க்கும் அதிகமான ரோபோக்கள் இந்த கண்காட்சியில் இடம்பெற உள்ளதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.