1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tn govt order that law and order wont come under rti

சட்டம் ஒழுங்கு இனிமே RTI-யின் கீழ் வராது!.. தமிழக அரசு அதிரடி...

rti
கடந்த பல வருடங்களாகவே சமூக நல ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடம் தகவல் உரிமை அறியும் சட்டம் (RTI) பிரபலமாக வருகிறது. அரசு தொடர்பான பல தகவல்களை RTI மூலம் சமூக ஆர்வலர்களும், பத்திரிகையாளர்களும் பெற்று அதை வெளியிட்டு விமர்சித்து வந்தனர்.  தற்போது தவெக ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில் இனிமேல் சட்டம் ஒழுங்கு தொடர்பான தகவல்கள் RTI -யின் வராது என தமிழக அரசு புதிய அரசாணை பிறப்பித்திருக்கிறது..

சட்டம் ஒழுங்கு தொடர்பான சில தகவல்கள் இனி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வழங்கப்படாது என அறிவித்து தமிழக அரசு புதிய உத்தரவிட்டிருக்கிறது.

அதன்படி மாணவர்கள், விவசாயிகள், அரசியல் கட்சிகளின் போராட்டங்கள், காவல் மரணங்கள், துப்பாக்கி சூடு தொடர்பான அறிக்கைகள் இனிமேல் RTI -யின் கீழ் பெற முடியாது. மேலும் சமூக சாதிய மோதல்கள், போராட்ட வழக்குகளை திரும்ப பெறுவதற்கான கோரிக்கைகள் உள்ளிட்டவை தொடர்பான தகவல்களையும் RTI - யின் கீழ் பெற முடியாது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
ட்ரூ காலர் , லிங்க்ட்இன் இணைந்து செய்யும் புதிய சேவை.. வேற லெவல் வசதி..