1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. sengottayan is upset with tvk head on dharapuram

தாராபுரம் இடைத்தேர்தல்!. அப்செட்டில் செங்கோட்டையன்!. விஜய் ஷாக்!...

sengottaiyan
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் வருகிற அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்த இரண்டு தொகுதிகளிலும் ஏற்கனவே அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்த இருவருக்கும் தவெக வாய்ப்பு கொடுத்துள்ளது.

எனவே, அந்த தொகுதி மக்களின் அதிருப்தியை தாண்டி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் தவெக இருக்கிறது. ஒருபக்கம் இந்த இரண்டு தொகுதிகளின் வெற்றியும் தவெகவுக்கு மிகவும் முக்கியம். ஏனெனில் இதில் ஏதேனும் ஒன்றில் தோற்றாலும் மக்களின் நம்பிக்கையை தவெக இழந்துவிட்டது என திமுகவினர் விமர்சனம் செய்வார்கள்.

எனவே இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என விஜய் நினைக்கிறார். அதனால்தான், நேற்று கூட மதுராந்தகம் தொகுதிக்கு சென்று விஜய் பிரச்சாரம் செய்தார். தாராபுரத்தை பொறுத்தவரை தொகுதியின் பொறுப்பாளராக அமைச்சர் அருண்ராஜை விஜய் நியமித்திருக்கிறார். இதில் செங்கோட்டையன் அப்செட் ஆகியிருப்பதாக சொல்லப்படுகிறது.

நான் இருக்கும் போது அருண்ராஜை எதற்காக நியமித்திருக்கிறார்கள் என அவர் தேர்தல் பணிகளை சரியாக பார்க்கவில்லை என சொல்லப்படுகிறது. உளவுத்துறை மூலம் இந்த ரிப்போர்ட் விஜய்க்கு சென்றிருக்கிறது. இதே நிலை நீடித்தால் நீங்கள் பிரச்சாரத்திற்கு போனாலும் தாராபுரத்தில் வெற்றி பெற முடியாது என உளவுத்துறை எச்சரித்திருக்கிறது.
எனவே செங்கோட்டையனை சமாதானப்படுத்தும் முயற்சியில் விஜய் ஈடுபட்டிருப்பதாக செய்திகள் கசிந்திருக்கிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
தேர்தல் செலவு ரூ.19.8 கோடி!.. தேர்தல் ஆணையத்திடம் கணக்கு சொன்ன தவெக!...