1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tvk submitted the election expense in election commission

தேர்தல் செலவு ரூ.19.8 கோடி!.. தேர்தல் ஆணையத்திடம் கணக்கு சொன்ன தவெக!...

vijay
இரண்டு வருடங்களுக்கு முன்பு நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கினார். அடிப்படையில் விஜய் நடிகர் என்பதாலும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதாகவும் 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டது.  எந்த அரசியல் கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிட்டு 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகம் தற்போது தமிழகத்தில் ஆட்சி அமைத்திருக்கிறது.

இந்நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலில் தேர்தல் செலவு கணக்கை தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்திருக்கிறது.  அதில், தேர்தலில் மொத்தம் ரூ.19.8 கோடி செலவு செய்திருப்பதாக தவெக தெரிவித்திருக்கிறது.

அதில் விளம்பரத்திற்காக 6.34 கோடியும், முதல்வரின் விமான பயணங்களுக்கு 3.54 கோடியும், பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோட் ஷோ நிகழ்ச்சிகளுக்கு 2.06 கோடியும், வாய்ஸ் ஆப் காமன் நிறுவனத்திற்கு ரூ.1.79 கோடி செலுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்திடம் தவெக தெரிவித்திருக்கிறது. இது திமுக செய்த செலவில் 10 சதவீதம் என சொல்லப்படுகிறது..
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
வீரமணி விவகாரம்!.. திமுக ஆட்சியில் 500 கோடி பேரம்!.. நிர்மல்குமார் புகார்!....