1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tamilnadu is in first place getting foreign investment

2026-27 நிதியாண்டில் அந்நிய முதலீட்டில் முதலிடத்தில் தமிழ்நாடு!..

vijay
2026 சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்ற ஆட்சியைப் பிடித்திருக்கிறது. 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஆட்சியைப் பிடித்த திமுக யாருமே எதிர்பாராத வகையில் தோல்வியடைந்து தற்போது எதிர்கட்சியாக அமர்ந்திருக்கிறது.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் வெளிநாடுகளிலிருந்து வரும் அந்நிய முதலீடும், இந்தியாவின் மற்ற மாநிலங்களிலிருந்து அந்த மாநிலத்திற்கு வரும் தொழில் முதலீடுகள் மிகவும் முக்கியம். அந்த வகையில் தவெக பொறுப்புக்கு வந்தபின் மற்ற மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் முதலீடுகளை கொண்டு வரும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சில நாட்களுக்கு முன்பு கூட தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தனது குழுவுடன் லண்டன் சென்று அந்த சில தொழிலதிபர்களை சந்தித்து பேசினார். அதில் 15 ஆயிரத்து 300 கோடி அளவில் முதலீடுகளை தமிழகத்திற்கு அவர் கொண்டு வந்திருக்கிறார்.

இந்நிலையில்தான் 2026 - 27ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 5.95 பில்லியன் அமெரிக்க டாலர் அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்த்து தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது
. தமிழ்நாட்டுக்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரா 4.22 பில்லியன் டாலர், டெல்லி 2.67 பில்லியன் டாலர், கர்நாடகா 2.11 பில்லியன் டாலர், குஜராத் 1.30 பில்லியன் டாலர் அந்நிய முதலீடுகளை ஈர்த்துள்ளன.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
செப்டம்பர் 28ம் தேதி மதுரைக்கு போகும் முதல்வர் விஜய்!..