1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tn cm vijay strictly order who done corruption

யாரா இருந்தாலும் விட்ராதீங்க!.. ஆக்சன் எடுங்க!.. விஜய் போட்ட ஆர்டர்!...

vijay
2021 முதல் 2026 வரை திமுக ஆட்சியில் இருந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் புதிதாக கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அக்கட்சியின் தலைவர் விஜய் தற்போது தமிழகத்தின் முதலமைச்சராக மாறியுள்ளார்.

முதலமைச்சரான பின் ‘எனது ஆட்சியில் லஞ்ச ஊழல் இருக்காது.. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் விட மாட்டேன்.. மக்கள் பணத்தை தொட்டவர்களை விட மாட்டேன்’ என்றெல்லாம் முதல்வர் விஜய் ஆவேசமாக பேசினார். தற்போது தமிழகத்தில் உள்ள எல்லா துறைகளிலும் கடந்த திமுக ஆட்சியில் என்னென்ன ஊழல் நடந்தது என்கிற தகவல்களை முதல்வர் விஜய் வெளியே எடுக்க சொல்லியிருக்கிறாராம். எனவே, தகுந்த ஆதாரங்களோடு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சொல்லப்படுகிறது..

டாஸ்மாக் ஊழல் மட்டுமல்ல, கடந்த 5 வருடங்களில் நடைபெற்ற எந்த ஊழலிலும் தொடர்புடைய முன்னாள் அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் என யாரையும் விட வேண்டாம்’ என முதல்வர் விஜயே நேரடியாக கூறியிருக்கிறாராம். இதன் காரணமாகவே சமீபத்தில் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக செந்தில் பாலாஜி மற்றும் விசாகன் ஐ.ஏ.எஸ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. விரைவில் பலரும் சிறைக்கு செல்ல வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
டெல்லி போராட்டம்!.. மாணவர்கள் மீதான வழக்குகள் வாபஸ்!. பணிந்த ஒன்றிய அரசு!...