1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. TN Govt allowed 100% audience in theaters

திரையரங்கை முழுவதும் நிரப்ப அனுமதி.. ஹவுஸ் ஃபுல்தான்! – ரசிகர்கள் கொண்டாட்டம்!

Tamilnadu
பொங்கலுக்கு மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் படங்கள் வெளியாகும் நிலையில் திரையரங்குகளை முழுவதும் நிரப்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில் திரையரங்குகளில் 50% பார்வையாளர்கள் மட்டுமே அமர வேண்டும் என அரசு அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில் தற்போது பொங்கலுக்கு மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் படங்கள் வெளியாகும் நிலையில் 100% பார்வையாளர்களை அனுமதித்தால் மட்டுமே டிக்கெட் விலையை உரிய கட்டணத்தில் வழங்க இயலும் என்றும், திரையரங்குகளும் நஷ்டத்தில் இருந்து மீள முடியும் என்றும் அரசிடம் அனுமதி கோரப்பட்டது.

இதுகுறித்து நடிகர் விஜய்யும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பேசிய நிலையில் தற்போது திரையரங்குகளில் 100% பார்வையாளர்களை அமர வைக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் விஜய் மற்றும் சிம்பு ரசிகர்கள் பட வெளியீட்டிற்கான கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
நாங்க எந்த நிலத்தையும் வாங்கல.. விவசாயமும் பண்ணல! – டவர் தாக்குதலால் அறிக்கை விட்ட ரிலையன்ஸ்!