செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 4 ஜனவரி 2021 (10:06 IST)

கூட்டணியில் குழப்பம்; அமித்ஷா சென்னை வருகை! – ரஜினியை சந்திக்க வாய்ப்பு!

முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவித்தது குறித்து அதிமுக – பாஜக இடையே சலசலப்பு எழுந்துள்ள நிலையில் அமித்ஷா மீண்டும் சென்னை வர உள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டது குறித்து அதிமுக – பாஜக இடையே சர்ச்சையான கருத்துக்கள் எழ தொடங்கியுள்ளன.

இந்நிலையில் துக்ளக் பத்திரிக்கையின் ஆண்டு விழாவிற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜனவரி 14 அன்று சென்னை வர உள்ளார். முன்னதாக அமித்ஷா சென்னை வந்தபோது அதிமுக – பாஜக கூட்டணி முடிவானது. அதுபோல அமித்ஷா மீண்டும் சென்னை வரும் நிலையில் பாஜகவுக்கு கூட்டணியில் எத்தனை இடங்கள்? முதல்வர் வேட்பாளர் சர்ச்சை உள்ளிட்டவை குறித்து முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் உடல்நல குறைவால் கட்சி தொடங்குவதை கை விட்ட ரஜினிகாந்தையும் அமித்ஷா சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது.