செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 4 ஜனவரி 2021 (10:51 IST)

திமுக கூட்டணி எளிதாக 200 தொகுதிகளை வெல்லும் – ஆருடம் கூறும் கூட்டணிக் கட்சி தலைவர்!

முன்னாள் மத்திய அமைச்சரும் நிதியமைச்சருமான ப சிதம்பரம் திமுக கூட்டணி சட்டப்பேரவை தேர்தலில் 200 இடங்களில் வெல்லும் எனக் கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சி மக்களைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்று வெற்றி பெற்றது. அதையடுத்து வரும் சட்டமன்ற தேர்தலிலும் அந்த கூட்டணியே தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கூட்டம் ஒன்றில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ப சிதம்பரம் திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெல்லும் என அறிவித்துள்ளார்.

மேலும் ‘பாஜக கூட்டணியில்தான் நீடிப்போம் என என்று அதிமுக அறிவித்ததோ அன்றே அவர்கள் தோல்வி உறுதியாகிவிட்டது. தேர்தலுக்கு 100 நாட்கள் உள்ள நிலையில் திமுக கூட்டணி கடுமையாக உழைத்தால் எளிதாக 200 தொகுதிகளில் வெற்றி பெறலாம்’ எனக் கூறியுள்ளார்.