1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tn governor asking how many mlas support for tvk

35% எல்லாம் இருக்கட்டும்!. எவ்ளோ எம்.எல்.ஏ?. அதை சொல்லுங்க!.. தவெகவிடம் ஆளுநர் கறார்...

vijay
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் இடத்திற்கு வந்திருக்கிறது. தவெக தலைவர் விஜய் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்கவிருக்கிறார். அதேநேரம் தவெக தனது பலத்தை நிரூபிக்க இன்னும் 12 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை. எனவே, காங்கிரஸ், தேமுதிக, விசிக, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளிடமிருந்து ஆதரவை பெற தவெக தரப்பு முயற்சி செய்து வருகிறது..

இதில் காங்கிரஸ் மட்டும் தவெகவுக்கு ஆதரவு கொடுப்பது கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கிறது. விரைவில் அந்த தொடர்பான அறிவிப்பு வெளியாகவுள்ளது. ஒருபக்கம் தங்களை ஆட்சி அமைக்க அழைக்குமாறு ஆளுநருக்கு தவெக தலைவர் விஜய் கடிதம் எழுதியிருக்கிறார். வருகிற 7ம் தேதி அதாவது நாளை பதவி ஏற்கும் விழாவை நடத்துமாறு ஆளுநருகு விஜய் கோரிக்கை வைத்திருக்கிறார்..

ஆளுநருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் தவெக 35 சதவீத வாக்குகளை பெற்றிருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் ஆளுநர் தரப்பு ‘35 சதவீத வாக்குகள் இருக்கட்டும்.. உங்களுக்கு எத்தனை எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள்?.. அவர்களின் ஆதரவு கடிதங்களை கொண்டுவாருங்கள்’ என கேட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. எனவேதான் தற்போது எம்.எல்.ஏக்களின் ஆதரவை பெறும் முயற்சியில் தவெக ஈடுபட்டிருக்கிறது.

காங்கிரசை தொடர்ந்து விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கும் விஜய் தற்போது கடிதம் எழுதியிருக்கிறார். அடுத்து தேமுதிக, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளின் தலைவர்களுக்கும் தவெக தரப்பு கடிதம் எழுதி ஆதரவை கேட்பார்கள் என தெரிகிறது..
அடுத்த கட்டுரையில்
தவெகவுக்கு ஆதரவு!. அதிமுகவில் மூன்று குரல்கள்!.. குழப்பத்தில் பழனிச்சாமி!..