1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Webdunia
Last Modified: புதன், 6 மே 2026 (10:25 IST)

இன்று ஆதரவு கடிதம் தருகிறது காங்கிரஸ்.. கம்யூனிஸ்ட்கள் ஆதரவு தர சம்மதம்..

rahul vijay
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, புதிய ஆட்சி அமைப்பதற்கான அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. 234 இடங்களை கொண்ட தமிழக சட்டசபையில், அரசு அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையை எட்ட இன்னும் 11 இடங்கள் குறைவாக உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
 
திமுக கூட்டணியில் 5 தொகுதிகளில் போட்டியிட்டு 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு, த.வெ.க சார்பில் கூட்டணி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடிதம் மூலம் விடுக்கப்பட்ட இந்த அழைப்பு குறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாளை மறுநாள் தனது செயற்குழுவை கூட்டி முக்கிய முடிவெடுக்க உள்ளது.
 
மற்றொரு முக்கியத் திருப்பமாக, காங்கிரஸ் கட்சி விஜய்க்கு நிபந்தனையுடன் கூடிய ஆதரவை வழங்க முன்வந்துள்ளது. பெரும்பான்மைக்கு இன்னும் 10 இடங்கள் தேவைப்படும் சூழலில், காங்கிரஸின் ஆதரவு த.வெ.க-விற்கு மிக முக்கியமாக கருதப்படுகிறது. இதற்கான ஆதரவுக் கடிதத்தை இன்று காங்கிரஸ் தலைமை விஜயிடம் வழங்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
ஒருபுறம் காங்கிரஸின் ஆதரவு உறுதியாகியுள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சியின் முடிவு தமிழக அரசியலில் புதிய ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
 
Edited by Siva