1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. congress has kept check to tvk vijay

அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதே விஜய்க்கு நல்லது!.. இல்லனா சிக்கல்தான்!...

eps vijay
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜயின் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. எனவே, தங்களை ஆட்சி அமைக்க அழைக்கவேண்டும் என தவெக தரப்பில் ஆளுநரிடம் கோரிக்கையும் வைக்கப்பட்டிருக்கிறது. வருகிற 7ம் தேதி பதவியேற்பு விழாவை நடத்தவேண்டும் எனவும் விஜய் கோரிக்கை வைத்திருக்கிறார்.

ஒருபக்கம், தவெக ஆட்சி அமைக்க போதுமான எம்.எல்.ஏக்களின் ஆதரவு இல்லை. ஏனெனில், தவெக 108 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கும் நிலையில் ஆட்சியமைக்க இன்னும் 12 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை.. எனவே, திமுக கூட்டணியில் உள்ள தேமுதிக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளுடன் தவெக பேசி வருகிறது.

தற்போதையை நிலவரப்படி திமுக கூட்டணியில் உள்ள தவெகவுக்கு ஆதரவளிக்க காங்கிரஸ் முடிவு செய்திருக்கிறது. அதேநேரம் பாஜக கூட்டணியில் இருக்கும் எந்த கட்சிகளின் ஆதரவை பெறக்கூடாது என காங்கிரஸ் நிபந்தனை விதித்திருக்கிறது. எனவே திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளிடம் மட்டுமே ஆதரவை பெற வேண்டிய நிலையில் தவெக இருக்கிறது. காங்கிரஸ் 5 எம்எல்ஏக்களின் ஆதரவை கொடுக்கும் நிலையில் தேமுதிக, விசிக, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளின் ஆதரவை பெற தவெக முயற்சி செய்து வருகிறது..இது நடந்தால் மட்டுமே விஜய் ஆட்சி அமைக்க முடியும்..

ஆனால், பல கட்சிகளிடம் ஆதரவை பெற்றால் பின்னாளில் ஆட்சியை கவிழ்த்துவிடுவார்கள். ஒரே கட்சியின் ஆதரவை பெற்று ஆட்சி அமைப்பதே சிறந்த முடிவு. எனவே, அதிமுகவிடம் பேசி அக்கட்சியின் ஆதரவை விஜய் பெறுவதே நீண்ட கால பலனை தரும். 5 வருடங்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் ஆட்சியை நடத்தமுடியும் என பலரும் சொல்லி வருகிறார்கள்.

விஜய் என்ன முடிவெடுக்கப்போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்!..
About Writer
பாலகிருஷ்ணன்
அடுத்த கட்டுரையில்
திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா சகாயம் ஐஏஎஸ்? ஜெயித்தால் கனிமவளத்துறை அமைச்சரா?