தொடர்புடைய செய்திகள்
- திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா சகாயம் ஐஏஎஸ்? ஜெயித்தால் கனிமவளத்துறை அமைச்சரா?
- இன்று ஆதரவு கடிதம் தருகிறது காங்கிரஸ்.. கம்யூனிஸ்ட்கள் ஆதரவு தர சம்மதம்..
- அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதே விஜய்க்கு நல்லது!.. இல்லனா சிக்கல்தான்!...
- புதுச்சேரியிலும் அதிமுக, திமுகவை பின்னுக்கு தள்ளிய தவெக.. வாக்கு சதவீத முழு விவரங்கள்..!
- செக் வைத்த காங்கிரஸ்!.. முதல்வர் ஆவாரா விஜய்?.. பரபர அரசியல் களம்!..
ஆரம்பிக்கப்படுகிறது தவெக தொழிற்சங்கம்.. போக்குவரத்து ஊழியர்கள் மும்முரம்..!
தமிழக அரசு போக்குவரத்து துறையின் கீழ் இயங்கும் எட்டு கழகங்களில் சுமார் 1.16 லட்சம் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தற்போதுள்ள சூழலில் தி.மு.க.வின் தொ.மு.ச., அ.தி.மு.க.வின் அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யு. மற்றும் ஏ.ஐ.டி.யு.சி. போன்ற அரசியல் சார்புள்ள சங்கங்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இருப்பினும், தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும், இதுவரை போக்குவரத்து துறையில் அதற்கு என தனியாக தொழிற்சங்கம் இல்லை.
தற்போது நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ள நிலையில், அந்த பலத்தை பயன்படுத்தி போக்குவரத்து துறையில் அக்கட்சி சார்பில் தொழிற்சங்கம் தொடங்க ஊழியர்கள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆட்சிக் காலங்களில் அந்தந்த கட்சிகளின் சங்கங்களே பலமாக இருந்த நிலை, தற்போது மாற தொடங்கியுள்ளதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
புதிய ஆட்சி அமைய உள்ள நிலையில், த.வெ.க. தொழிற்சங்கத்தை யார் முதலில் தொடங்குவது என்பதில் ஊழியர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. பிற சங்கங்களில் இருப்பவர்கள் கூட தற்போது த.வெ.க. பதாகைகளை வைக்க தொடங்கியுள்ளனர். சில பணிமனைகளில் இருவேறு குழுக்களாக பிரிந்து சங்கம் அமைக்கும் முயற்சிகள் நடப்பது போக்குவரத்து துறையில் புதிய அரசியல் மாற்றத்தை உணர்த்துகிறது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
