ஞாயிறு, 19 ஏப்ரல் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 11 பிப்ரவரி 2026 (15:05 IST)

தமிழக பாஜக அதிரடி: தேர்தல் பணிகளுக்காக மேலாண்மைக் குழு அமைப்பு!

தமிழக பாஜக அதிரடி: தேர்தல் பணிகளுக்காக மேலாண்மைக் குழு அமைப்பு!
தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் 'சட்டமன்ற தேர்தல் மேலாண்மைக் குழு' அமைக்கப்பட்டுள்ளது. 
 
இக்குழு தேர்தல் பணிகளை சிறப்பாக வழிநடத்தி, தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கப் பாடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இக்குழுவின் அமைப்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இணை அமைப்பாளர்களாக S.R. சேகர், R.N. ஜெயப்பிரகாஷ், மா. வெங்கடேசன், மாலா செல்வகுமார் மற்றும் S.R. ராமப்பிரியன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 
 
தேர்தலை எதிர்கொள்ள தேவையான களப்பணிகளில் பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முழுவீச்சில் ஈடுபட இக்குழு வழிகாட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva