1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. nainar nagendran comment about mk stalin statement

ஆட்சியில் பங்கு ஒத்துவராதுன்னு ஸ்டாலின் சொன்னது இதுதான் காரணம்!.. நயினார் நாகேந்திரன் பேட்டி..

dmk congress
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் ஆட்சி மற்றும் அதிகாரத்தில் எங்களுக்கும் பங்கு கொடுக்க வேண்டும் என கோரிக்கையை வைத்தது
. காங்கிரஸ் வியூக வகுப்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி, மாணிக்கம் தாகூர் எம்பி உள்ளிட்ட பலரும் இந்த கருத்தை வலியுறுத்தினார்கள். ஆனால் திமுக அதை ஏற்றுக்கொள்ளவில்லை..

திமுகவை பொருத்தவரை மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்கிற கொள்கையைத்தான் அது பல வருடங்களாகவே கடைப்பிடித்து வருகிறது. ஒருபக்கம் நாம் கேட்பதை திமுக கொடுக்கவில்லை என்றால் ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு கொடுப்போம் என சொல்லும் தவெக பக்கம் செல்லலாமா என்ற யோசனையும் காங்கிரஸ் இருப்பதாக தெரிகிறது.

இந்நிலையில்தான் இந்தியா டுடே கருத்தரங்கில் பேசிய முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் பங்கு என்பது தமிழகத்திற்கு ஒத்து வராது என கூறி இதற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்..

இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ‘திமுக ஆட்சிக்கு வராது என்பதால் முதல்வர் ஆட்சியில் பங்கு தமிழகத்திற்கு ஒத்து வராது எனக் கூறியிருக்கிறார். காங்கிரஸ் திமுக கூட்டணியில் தொடருமா என்கிற சந்தேகம் எழுந்திருக்கிறது. அதேநேரம் எங்களின் தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக உள்ளது.. 200 தொகுதிகளை வெல்லும்’ எனக் கூறியிருக்கிறார்..
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
தமிழக பாஜக அதிரடி: தேர்தல் பணிகளுக்காக மேலாண்மைக் குழு அமைப்பு!