விஜய் வருங்கால பிரதமரா?!.. டி.கே.சிவக்குமார் கொடுத்த ரியாக்ஷன்...
நடிகராக இருந்து தற்போது தமிழகத்தின் முதலமைச்சராக மாறியிருப்பவர் விஜய். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அதே நேரம் வெறும் ரசிகர்கள் மட்டுமில்லாமல் முதல் நிலை வாக்காளர்கள் முதல் முதியவர்கள் வரை விஜய்க்கு வாக்களித்ததால்தான் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்திருக்கிறது.
தமிழக அரசியல் வரலாற்றில் கட்சி தொடங்கி இரண்டு வருடங்களில் ஒரு கட்சி இப்படி ஒரு அசுர வளர்ச்சியை பெற்றது இல்லை. தமிழக அரசியல் களம் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையே போட்டி என்று மட்டுமே செயல்பட்டு வந்த நிலையில் புதிய சக்தியாக விஜய் வந்திருக்கிறார். அவரின் அரசியல் வளர்ச்சியை இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மக்கள் மற்றும் அரசியல்வாதிகள் கவனித்து வருகிறார்கள்..
ஒருபக்கம் சட்டசபையில் பேசும் தவெக எம்.எல்.ஏக்கள் எங்களது தலைவர் தளபதி விஜய் இந்தியாவின் பிரதமராகவும் வருவார்.. அதற்கும் அவருக்கு தகுதி இருக்கிறது என பேசி வருகிறார்கள்.;
இந்நிலையில்தான் சென்னையில் நடந்த முதல்வர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட கர்நாடகா முதலமைச்சர் டி.கே சிவக்குமாரிடம் முதல்வர் விஜய் வருங்கால பிரதமர் என அவரின் ஆதரவாளர்கள் கூறுவது பற்றி கருத்து கேட்டதற்கு இதுகுறித்து நான் எதுவும் பேச விரும்பவில்லை.. முதலில் நாட்டை கட்டியெழுப்புவோம்.. பெரிய விஷயங்கள் குறித்து இப்போது பேச வேண்டாம்.. நாமெல்லாம் இன்னும் இளமையாக இருக்கிறோம்.. முதல்வர் விஜய் அரசியலுக்கு புதிதாக வந்திருக்கிறார்.. அவர் இன்னும் நெடுதூரம் செல்ல வேண்டியிருக்கிறது என கூறியிருக்கிறார்.